தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கங்குவா படம் உருவாகி வருகின்றது. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திஷா பதாணி நடித்துள்ளார். மேலும் இதில் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை ரசிகர்கள் பார்ப்பதற்கு பெரும் ஆவலாக உள்ளார்கள். இதில் சூர்யாவின் கெட்டப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், கங்குவா படம் பற்றி முதலாவது விமர்சனத்தை பாடல் ஆசிரியர் விவேகா பார்த்து விட்டு தெரிவித்துள்ளார். தற்பொழுது அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.
அதன்படி அவர் கூறுகையில், கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்து போனேன். இந்திய சினிமாவின் பெருமைமிகு பிரம்மாண்டம்.. இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பும் உச்சம் என படம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
Listen News!