தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அதிதி. இவர் பிரபல இயக்குநர் சங்கரின் மகள் ஆவார். அதிதி நடித்த முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் அதில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் அதிதி ஆடிய நடனம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படமும் வெற்றி படமாக அமைந்தது. இறுதியில் அதிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் 'நேசிப்பாயா?' ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதில் அதர்வாவின் தம்பி கதாநாயகனாக நடித்திருந்தார்.
d_i_a
அதிதி சங்கர் சினிமாவில் நடிகையாக காணப்பட்டபோதும் அவர் நிஜ வாழ்க்கையில் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர் ஆக காணப்படுகின்றார். இதனால் அவர் சினிமாவுக்கு அடி எடுத்து வைத்த போதே பலரும் வியப்பில் ஆழ்ந்திருந்தனர்.
இந்த நிலையில், நடிகை அதிதி சங்கர் அளித்த பேட்டியில் அவருடைய தந்தையான ஷங்கர் தனக்கு சினிமாவில் நடிக்க வரும்போது விதித்த நிபந்தனை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், மருத்துவ படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்க போகிறேன் என அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா நீண்ட நேரம் யோசித்து விட்டு இறுதியில் ஒரு நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார். அதாவது நான் சினிமாவில் வெற்றி பெறவில்லை என்றால் திரும்ப மருத்துவத்துறைக்கு திரும்பி விட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை என தெரிவித்துள்ளார்.
எனவே அதிதி சங்கர் சினிமாவில் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பதை இனிவரும் காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் அதிதி சங்கர் வழங்கிய இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!