• Feb 01 2025

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? சதீஷ்குமார் ஓபன் டாக்!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பல இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டது. 

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக கோபி கேரக்டரில்  நடித்து வருபவரே சதீஷ் குமார். அவர் தனது வாழ்க்கை அனுபவத்தைப் பற்றிய  விடயங்களை தற்போது இன்ஸ்டா வீடியோ ஒன்றில்  பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில்," தனி ஒருவன் படத்தில்  இன்ஸ்பெக்ட்ர் கேரக்டர் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனக்கு கிடைத்த அனைத்து படங்களிலும் என்னைப் பொலீஸ் கேரக்டருக்கே அழைத்தனர்" என்றார் சதீஷ்.


அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற பாக்கியலட்சுமி  என்ற நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில்  நான் கணவராக, அப்பாவாக, தாத்தாவாக எனப் பல கேரக்டரில் நடித்தேன் என்றார்.

அதில் இரண்டு மனைவிகளுக்கு கணவனாக நடித்து வருகின்றேன். இதனால் இனிவரும் சீரியல்களில் இப்படியான கேரக்டர் தந்துவிடுவார்களோ என்ற பயமும் எனக்கு உள்ளது. ஆனால் இனி நடிக்கவுள்ள சீரியல்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற கேரக்டர் பண்ணப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிய போவதாகவும் அந்த சீரியலுக்கு பின்னர் 6 மாத இடைவேளை எடுத்த பின்னரே அடுத்த சீரியலில் நடிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சதீஷ் கூறியது பாக்கியலட்சுமி சீரியல் பிரியர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement