• Dec 26 2024

வெளிய போனா நமக்கு safety இருக்காது..! பிரதீப்ட பென்ஸ்க்கு என்ன பதில் சொல்லுற? முதன் முறையாக பயத்தில் பிதற்றும் மாயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அங்குள்ள சக பெண் போட்டியாளர்களுக்கு ஆபத்தாக உள்ளார் என்ற குற்றச்சாட்டு காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் வீட்டிலிருந்த பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா, பூர்ணிமா, ஐஷு, அட்சயா, ரவீனா மற்றும் ஜோவிகா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம் என்பது யாவரும் அறிந்ததே..

அத்துடன், கடந்த வார நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், பிரதீப் வெளியேற்றத்திற்கு நீங்க கொடுத்த ரெட் கார்டு தான் காரணம் என்றும் என்னையும் உங்க கூட பிளேயர் ஆக சேர்க்காதீர்கள். உங்கள் முடிவின் படி தான் அவரை வெளியேற்றினோம் என சொல்லி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது பிரதீப் வெளியேறியது நம்மால தான் நடந்தது என்பது தெரிய வந்தால் வெளிய போனா நாம செப்பா இருப்பமா என பயப்பட தொடங்கிவிட்டார். இது தொடர்பிலான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


அதற்கு நிக்சன் 'வெளியே போய் பிரதீப்ப நேர்ல பாத்து சமாளிச்சு  கொள்ளலாம்' என கூற அப்போதும் தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் 'அதெல்லாம் சந்திக்க முடியாது, அவன் என்ன பெரிய இவனா' என மாயா கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதேவேளை, பூர்ணிமாவிடம், பிரதீப்க்கு வெளில நிறைய பான்ஸ் இருகாங்க. நாம வெளிய போனா பாதுகாப்பா இருப்போமா என பேசியுள்ளார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement