• Dec 26 2024

தமிழ் சினிமால இவங்க 2 பேரும் தான் யாருக்கும் காக்கா பிடிக்க மாட்டாங்க! இயக்குனர் பகிர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் காணப்படுபவர் தான் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுவையாக காணப்படுகின்றன. மேலும் அவர் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் என்றாலும் அவருடைய நடிப்பு கட்டாயம்  காணப்படும்.

ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் தான் கே.எஸ் ரவிக்குமார். இவர் காமெடி, நாடகம் மற்றும் த்ரில்லர் போன்ற திரைப்படங்களை இயக்கி தனக்கெனவே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

2008 ஆம் ஆண்டு தசாவதாரம் படத்தை இயக்கினார். இந்த படம் முதல் நான்கு வாரங்களிலேயே உலக அளவில் 16 மில்லியன் டாலர்களை மொத்தமாக வருமானம் ஈட்டிக் கொடுத்தது. மேலும் இந்த திரைப்படம் இந்திய அளவிலேயே அதிகமாக வசூலில் லாபம் ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையையும் தன்னகம் கொண்டுள்ளது.


இந்த நிலையில், கே. எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவிலேயே தனக்குத் தெரிந்து ஏ.ஆர் ரகுமான் மற்றும் நடிகர் அஜித் இவர்கள் இரண்டு பேரும் மட்டும் தான் யாருக்கும் காக்கா பிடிக்காமல் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பேசுவார்கள் என்று பேட்டி கொடுத்துள்ளார். இவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

சாதாரணமாகவே நடிகர் அஜித் குமார் தலைக்கென ரசிகர் கூட்டத்தையோ பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ பிடிக்காத ஒருவராக காணப்படுகின்றார். அதைப்போலவே ஏ. ஆர் ரகுமான் புகழின் உச்சம் தொட்டாலும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் காணப்படுகின்றார்.

Advertisement

Advertisement