• Dec 25 2024

நடுரோட்டில் முட்டிமோதிய முத்து, மீனா.. விஜயாவுக்கு ரோகிணி கொடுத்த சர்ப்ரைஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரவியும் ஸ்ருதியும் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க, மீனா விளக்குக்கு அலங்காரம் செய்கின்றார். அந்த நேரத்தில் ரோகிணி உள்ளே வர எங்கே போயிட்டு வாறீங்க என்று விஜயா கேட்க, அதற்கு ஷாப்பிங் போயிட்டு வருகிறோம் என்று சொல்லுகின்றார். மேலும் விளக்கேற்றுமாறு சொல்ல, எல்லா ஏற்பாடும்  மீனா செய்ய விளக்கேற்றது மட்டும் பாலரம்மாவா என்று முத்து கேட்கிறார். ஆனாலும் மீனா யார் விளக்கு ஏற்றினால் விளக்கு எரியும் என  சொல்லுகின்றார்.

அதன் பிறகு  ரோகிணி ஒரு தட்டில் பழங்கள், புடவை வைத்து விஜயாவிடம் கொடுக்கின்றார். புடவையை பார்த்ததும் விஜயா சூப்பரா இருக்கு என்று சந்தோஷப்பட, முத்து அப்பாக்கு வாங்கிட்டு வரலையா என்று கேட்கின்றார். அதற்கு இது லேடீஸ் கும்புறசாமி அதனால் ஆண்டிக்கு மட்டும் வாங்கி வந்தேன் என்று ரோகினி சொல்கின்றார்.

அந்த நேரத்தில் மீனா புருஷன் பொண்டாட்டியா இருக்கும்போது தனியா எடுத்துக் கொடுக்கக் கூடாது என்று சொல்ல, விஜயா உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டவுடன் மீனா அங்கிருந்து செல்கின்றார். மேலும் இந்த புடவைய தான் நீங்க கட்டிட்டு வரணும் என்று ரோகிணி அதற்கு பிளவுஸும் எடுத்துக் கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் மீனாவுடன் பூ கட்டுபவர்கள் வர அவர்களை உட்கார வைத்து மீனா பேசிக் கொண்டிருக்கின்றார். கொலு பொம்மைகளை அவர்கள் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க விஜயா அவர்களை திட்டி அசிங்கப்படுத்த அண்ணாமலை விஜயாவை அடக்குகின்றார்.


உடனே விஜயா தீபாதாரணை காட்டி பூஜையை முடிக்க ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் உள்ளே சென்று ஒரு நேம் போர்டு எடுத்துக் கொண்டு வருகின்றன. அதனை விஜயா தான் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லி விஜயாவை கட் பண்ண சொல்லுகின்றனர்.

அதில் ரோகினி ஆன்லைன் மேக்கப் கிளாஸ் எடுக்க போவதாகவும் அதற்கு விஜயாவின் ஆரம்ப எழுத்து வி ஐ வைத்து ஆரம்பித்ததாகவும் சொல்ல, ஏன் அம்மாவோட ஃபுல் நேம் வச்சா ராசி இல்லையா? அதனால ஒரு எழுத்து வெச்சிட்டீங்களா? என்று முத்து கிண்டல் செய்கிறார். ஆனாலும் இதெல்லாம் இப்ப பேஷன்  என்று சொல்லி சமாளிக்கின்றார்கள்.

அதன்பின்பு முத்துவும் மீனாவும் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டிக்கு துணி எடுத்து கொடுக்க முத்து அவர்களை வீட்டிற்கு கூப்பிடுவதற்கு பிளான் போடுகின்றார். ஆனாலும் மீனா எங்களுடைய அம்மா தங்கச்சி வீட்டுக்கு வந்தாலே அத்தை அசிங்கப்படுத்துவாங்க இவங்களுக்கு பிறகு மரியாதை இருக்காது  வேண்டாம் என்று சொல்லுகின்றார்.

ஆனாலும் முத்து கேட்காமல் பேசிக் கொண்டிருக்க இருவருக்கும் வாக்குவாதம் நடக்கின்றது. இதனால் அங்கு வந்தவர்கள் புருஷன் பொண்டாட்டி பிரச்சினையை இப்படி ரோட்டில் வைத்து பேசுவதா? என்று நான்கு விதமாக பேச, முத்து அவர்களை திட்டி அனுப்பி வைக்கின்றார். இறுதியில் அவர்கள் தாத்தா பாட்டியிடம் பேசிவிட்டு கிளம்புகின்றார்கள் .

மறுபக்கம் ரோகினி முத்துவின் போனில் இருந்து வீடியோவை எடுப்பதற்காக வித்யாவுக்கு பிளான் பண்ணி கொடுக்கின்றார். அதன்படி நாளை டான்ஸ் ஆடும் போது முத்துவின் போனை வாங்கி வீடியோ எடுக்குமாறு சொல்லுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement