• Feb 01 2025

எனக்கு விஜய்யின் கேரவன் தான் வேணும்..!! 'கிஸ்' பட ஷூட்டிங்கை திடீரென நிறுத்திய கவின்.?

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமான கவின், தற்போது வெள்ளித்திரையில் வெற்றி நாயகனாக வலம் வருகின்றார். இவருடைய நடிப்பில் முதலாவதாக லிஸ்ட் படம் வெளியானது. இந்த திரைப்படம் திரில்லர், ஹாரர் நிறைந்த ஜானரில் காணப்பட்டது.

இதை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்பு கவினுக்கு நிறைய பட வாய்ப்புகள்  குவியத் தொடங்கின. எனினும் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார், பிளடி பக்கர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது கிஸ் படத்தில் நடித்து வருகின்றார் கவின். சமீபத்தில் இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்ட இடத்தில் லிப்டில் சென்ற கவின், அது மெதுவாக செல்வதாக மீண்டும் கேரவனுக்கே வந்து தூங்கி இருந்ததாக தகவல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இவரால் இரண்டாவது மாடிக்கு கூட செல்ல முடியாத என பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.


இந்த நிலையில், நடிகர் கவின் விஜயின் கேரவனை கேட்டு டார்ச்சர் பண்ணுவதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும்  அவர்கள் கூறுகையில், கிஸ் பட பிடிப்பின் போது விஜய் பாவித்த கேரவன் தான் வேணும் என கவின் அடம் பிடித்துள்ளாராம்.

விஜய் பாவிக்கும் கேரவன் வசதி கூடியதாக லட்சரியாக காணப்படும். பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் அப்படி தான் பாவிப்பார்கள்.

இதனால் கவின் தனக்கு விஜய் கேரவன் தான் வேணும் என அடம் பிடித்துள்ளாராம். அவர் தன்னை தளபதி என நினைப்பது தான் காரணம். அதுமட்டும் இல்லாமல் அந்த கேரவன் இல்லையென்றால் ஷூட்டிங்கை இன்னொரு நாள் வைக்கலாம் என சொல்லியதாகவும் அந்தணன் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement