• Dec 27 2024

சார்லி மகன் கல்யாணத்துக்கு போன இசைஜானி.. பிரேம்ஜியை புறக்கணிக்க காரணம் இதுவா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக காணப்பட்ட இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜிக்கு கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. 

அதேபோல ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது. நடிகர் சார்லியின் மகன் அஜய் தங்கசாமிக்கும் திருமணம் நடைபெற்றது. இவ்வாறு சினிமா நட்சத்திரங்கள் பலரும் வியக்கும் வகையில் இந்த திருமணங்கள் எல்லாம் தடபுடலாக நடைபெற்றது.

இதை தொடர்ந்து நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக சினிமா பிரபலங்கள் தொடக்கம் அரசியல் ஆளுமைகள் வரை பலரையும் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றார்கள்.


இந்த நிலையில், நடிகர் சார்லியின் மகன் திருமணத்திற்கு இசைஞானி இளையராஜா கலந்து கொண்டுள்ளார். ஆனால் தம்பி ஆன கங்கை அமரனின் மகன் பிரேம்ஜின் திருமணத்திற்கு ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.


அதாவது, பிரேம்ஜியின் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் கடந்த ஒன்பதாம் தேதி எளிமையாக நடைபெற்றது.அதற்கு அடுத்த நாள் சார்லியின் மகனின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. ஆனால் தனது தம்பியின் மகன் பிரேம்ஜின் திருமணத்தில் இளையராஜா பங்கேற்காதது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

எனினும் அடுத்த நாளே சார்லின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டதால் ஏன் கங்கை அமரனின் மகன் கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை? சார்லி மகன் கல்யாணத்தில் மட்டும் கலந்து கொண்டாரே என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஆனாலும் பிரேம்ஜியின் திருமணத்திற்கு முந்தைய இரவு திருமண ஏற்பாடு நிகழ்வில் கலந்து கொண்ட இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவும் திருமணத்தின்போது இல்லை. அதன்படி இளையராஜா குடும்பத்தினர் கங்கை அமரனின் மகன்  கல்யாணத்தை புறக்கணித்துள்ளது என்ற தகவல் கசிந்தது.

இவ்வாறான நிலையில் இளையராஜா பிரேம்ஜியின் திருமணத்திற்கு கலந்து கொள்ளாததற்கு காரணம் அவரது திருமண அழைப்பிதழில் இளையராஜாவின் பெயர் இல்லாததுதான் என்றும் தற்போது கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement