• Dec 26 2024

அது எல்லாமே கண்டன்ட் தான்... அந்த சந்தோசம் ரொம்ப நாளா நீடிக்கல... பிக் பாஸ் நிக்சன் முதல் பேட்டி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி 90 நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டது . இந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் பிக் பாஸ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக கூறியுள்ளார். 


"பிக் பாஸ் வீட்டை வெளிய வந்த உடனே குடும்பம், நண்பர்கள் எல்லாம் பார்க்கனும் என்று ஹாப்பில வந்தன்.  அந்த சந்தோசம் ரொம்ப நாளா நீடிக்கல என்று தான் கவலை  என்னுடைய வீடியோ எல்லாம் பார்த்தன் என்ட பெயரை வைச்சி தான் கூடுதலான மீம்ஸ் செஞ்சி இருக்காங்க . 


உள்ள நடந்த பல விஷயங்களை நான் இதுக்கு அப்புறம் நான் மறைச்சன் என்றால் மக்கள் மனசில என்னைய பத்தி தப்பான எண்ணம் தான் இருக்கும். நிறைய பெயர் இதை பற்றிய கேள்விகள் தான் எங்க போனாலும் கேப்பாங்க. அதனால இப்பவே தெளிவுபடுத்திட்டன்  என்றால் நல்லது . 


உள்ள நிறைய விஷயங்கள் நடக்குது ஆனா என்னைய மட்டுமே ப்ராஜெக்ட் பண்ணி இருக்கீங்க . வீட்டுக்குள்ள போன பிறகே எல்லாரோடையும் சேரனும் என்று நினைச்சன் போன முதல் நாளே பிரச்சினையாகிட்டு. 


நான் யாருகிட்ட போய் பேசினாலும் யாரும் பெரிசா ரெஸ்பான்ஸ் தரவில்லை . ஆரம்பத்திலேயே நான் பிக் பாஸ் வீட்டை விட்டு போயிரலாம் என்ற முடிவுல தான் இருந்தன். பிறகு யோசிச்சிட்டு இதுக்கா கஷ்டபட்டு வந்தம் இருந்து முடிச்ச அளவு விளையாடுவம் என்று விளையாடினன். 


அதுக்குள்ள கொஞ்ச பெயர் தப்பான கதை எல்லாம் கட்டி விட்டாங்க. என்னையும் ஐஷுவையும் வைச்சி அது எந்த வித தப்பான எண்ணதிலையும்  நான் பழகல. அது எல்லாமே கண்டன்ட் தான். கண்டன்ட் மூலம் தான் நிறைய பெயர் உள்ள இருக்காங்க அது யார் என்று பெயர் சொல்ல விரும்பல . அதை விட குரூப் கேம் இருந்திச்சி  இப்பிடி நிறைய பிரச்சனைகள் என்று எல்லாமே சொல்லி இருக்கிறார் நிக்சன். 

Advertisement

Advertisement