• Dec 25 2024

எனக்கு என் கணவர் அப்பா மாதிரி.. கம்பேக் கொடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

‘பாக்கியலட்சுமி’ உள்பட ஒரு சில சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்த நடிகை ஒருவர் குழந்தை பிறப்பிற்காக பிரேக் எடுத்த நிலையில் தற்போது மீண்டும் ’கார்த்திகை தீபம்’ என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது கணவர் தான் தனக்கு வழிகாட்டி என்றும், அப்பா இறந்த பிறகு என்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்து அவர் என்னை கவனித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம்’ என்ற தொடரில் கார்த்திக்கை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஜெனிஃபர். இவர் ’பாக்கியலட்சுமி’ தொடரில் ராதிகாவாக நடித்தவர் என்பதும் அதன் பின்னர் திருமணத்திற்காக பிரேக் எடுத்த ஜெனிஃபர், திருமணம், குழந்தை பிறப்பு என்று ஆகி தற்போது தான் ரீஎன்ட்ரி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் பிரபலமான நடன இயக்குனர் சின்னாவின் மகள் தான் ஜெனிஃபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவர் காசி விஸ்வநாதன், ஒரு பிரபல ஒளிப்பதிவாளர். ஜெனிபர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’என்னுடைய கணவர் தான் எனக்கு எல்லாமே, என்னையும் என்னுடைய இரண்டு பசங்களையும் அவர்தான் முழுமையாக கவனித்துக் கொள்கிறார், என்னுடைய காஸ்ட்யூம் முதல் ஜுவல்லரி வரும் எல்லாமே அவர்தான் செலக்ட் பண்ணுவார், நான் சோர்வாக இருக்கும் போது கூட எனக்கு ஊக்கம் அளிப்பார், அப்பா இறந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆகும் நிலையில், அப்பா இடத்தில் இருந்து என்னை கவனித்துக் கொள்வது என்னுடைய கணவர் தான் என்று பெருமையாக கூறியுள்ளார்.

’அம்மன்’ ’பாக்கியலட்சுமி’ போன்ற சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் கர்ப்பமானதாகவும், அதனை அடுத்து பிரேக் எடுத்து குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளதாகவும், சினிமாவிலும் சரி, சீரியல்களிலும் சரி, நாயகி இடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது நிறைய கதை கேட்டு வருகிறேன் என்றும், கவனமாக கதையை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நானும் என் கணவரும் உறுதியாக இருக்கிறோம் என்றும் ஜெனிஃபர். கூறியுள்ளார்.

Advertisement

Advertisement