• Dec 26 2024

பாக்கியா குடும்பத்துக்கு வார்னிங் கொடுத்த ஜோசேப்! அடி வயிறெரிஞ்சு சாபமிட்ட ஈஸ்வரி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், ஜெனி வீட்டுக்கு போன செழியனை இன்னும் காணவில்லையே என வாசலில் பதற்றமாக நிற்கிறார் பாக்யா. அப்போது செழியனை அழைத்துக் கொண்டு எழில் வருகிறார்.

அங்கு செழியன் அடிபட்டு வந்திருப்பதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதன் பின்பு செழியனை ஜெனியின் அப்பா அடித்த விஷயத்தை அறிந்த கோபி, அவரது வீட்டிற்கு செல்வதாக புறப்படுகிறார். ஆனாலும் எல்லாரும் தடுக்க அவருக்கு போன் போட்டு கண்டபடி கிழிக்கிறார்.


அந்த போனை வாங்கி பேசிய ஈஸ்வரி, பொண்ணா வளர்த்து இருக்கீங்க, நீங்க எல்லாம் ஒரு குடும்பமா என சரமாரியாக கிழிக்கிறார். அத்துடன் செழியனுக்கு இன்னொரு கல்யாணத்தை கட்டி வைப்பதாகவும் சொல்கிறார். அதற்கு ஜோசப் இனி உங்க வீட்டில் இருந்து யாரும் வரக்கூடாது என வார்னிங் கொடுக்க , உங்க குடும்பம் நல்லாவே  இருக்காது என ஈஸ்வரி சாபம் கொடுக்கிறார். 

இதன் போது பாக்கியா  அமைதியாக இருங்க, எல்லாம் சரியா வரும். ஜெனியும் செழியனும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்ல, இனி அது நடக்காது என வீட்டில் உள்ள அனைவரும் சொல்கிறார்கள்.

மீண்டும் கோபி கோபத்தில் ஜெனியின் அப்பா வீட்டுக்கு செல்ல முயற்சிக்க, ராதிகா தடுத்து பிரச்சனை இன்னும் பெருசாக்க வேண்டாம் என சொல்கிறார்.

இதை தொடர்ந்து செழியன் ரூமுக்கு சென்ற பாக்கியா, அவரின்  அடிபட்ட காயங்களை பார்த்து கலங்குகிறார். மேலும் எல்லாம் சரியாகும் என நம்பிக்கை கொடுக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement