• Dec 28 2024

நெகட்டிவ் கமெண்ட்ஸ் -க்கு செருப்படி பதிலளித்த கங்குவா! முதல்நாளின் மொத்த வசூல் இதோ..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான  விமர்சனங்களை பெற்று தியேட்டர்களில் வெற்றி நடை போட்டு வருகின்றது. கங்குவா படம் ரிலீஸ் ஆகும் முன்பு இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் பட ப்ரோமோஷன் நிகழ்வுகள் இடம் பெற்றன.

மேலும் இதன் தயாரிப்பாளர் கங்குவா சுமார் 2000 கோடிகளை வசூலிக்கும் என அதிரடியாக தெரிவித்து இருந்தார். இந்த கருத்து பல விமர்சனங்கள் எழுவதற்கு காரணம் ஆனது. அதேபோல சூர்யாவும் கங்குவா படத்தை வாயை பிளந்து பார்ப்பீர்கள் என கூறி இருந்தார்.

d_i_a

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கங்குவா படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகியவை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. அதன் பின்பு 4 ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.


இந்த காரணத்தினால் கங்குவா படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அத்துடன் வரலாற்று கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளார்கள். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் கங்குவா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். . ஆனாலும் இந்த வசூலை மீள்பெறுமா என்பது தொடர்பில் கேள்வி எழுந்திருந்தது.

இந்த நிலையில். கங்குவா படத்தின் வசூல் விவரம் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி கங்குவா திரைப்படம் 58.62 கோடிகளை உலக அளவில் வசூலித்துள்ளது. இதை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் துள்ளிக்குதித்து வருகின்றார்கள்.

கங்குவா திரைப்படம் நேற்றைய தினம் வெளியான போதும் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் அமரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை கூட முறையடிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் தற்போது 58 கோடிகளை வசூலித்து எல்லாவற்றிற்கும் பதில் அளித்துள்ளது கங்குவா.

Advertisement

Advertisement