• Dec 25 2024

என்ன ரொம்ப மங்கலா இருக்குது.. கவினுக்கு ஹாய் சொன்ன நயன்.. இயக்குனரின் அரோகரா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா ஒரே படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. மேலும் முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தன்னைவிட வயது அதிகமான ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் பற்றிய கதை அம்சம்  கொண்ட படம் தான் கவின் - நயன்தாரா நடிக்கும் படம். இந்த படத்தின் கதை இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் கவினை விட வயது அதிகமான நயன்தாரா ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கிய நிலையில் நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் கவின் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாய் என்ற கேப்ஷனை பதிவு செய்திருந்தார். இதற்கு இயக்குனர் விஷ்ணு எடாவன் ‘நன்றி அரோகரா.. நயன்தாரா மேம் அவர்களுக்கு நன்றி, கவின் அண்ணாவுக்கு நன்றி, தயாரிப்பாளர் லலித் சார் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, இன்று முதல் இந்த பயணம் தொடங்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க இருப்பதாகவும் லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் நடன இயக்குனராக பிருந்தா பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் விஷ்ணு எடாவன் ஏற்கனவே விஜய் நடித்த ’லியோ’ உட்பட சில படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement