• Dec 25 2024

கிறிஸ்தவ முறையில் காதலனை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்! அட்டகாசமான போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது காதலனை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள்.

முதலில் இந்து முறைப்படி இடம் பெற்ற இவர்களுடைய திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டிருந்தார்  கீர்த்தி சுரேஷ். அதில் அவர் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தாலி கட்டிக் கொள்ளும் போட்டோ பலரது மனங்களையும் கவர்ந்திருந்தது.

d_i_a

இந்த நிலையில், நேற்றைய தினம் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தம்பதிகளுக்கு கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.


கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற மெக்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் தனது அன்பின் வெளிப்பாடாக ஆண்டனிக்கு உதட்டில் முத்தமிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தையும்  பகிர்ந்துள்ளார்.

மேலும் திருமணம் முடித்த பின்பு நடைபெற்ற டிஜேவில் இருவரும் குத்தாட்டம் போட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படத்தை பார்ப்பதற்கு மாஸாக உள்ளது,  செம ரொமான்டிக்கா இருக்கே என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement