• Dec 26 2024

லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் களமிறங்கும் புதிய ஹீரோ..? LCU வில் இணையும் பென்ஸ்.?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல இயக்குனராக லோகேஷ்  கனகராஜ் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி அதன் பின்பு கைதி திரைப்படத்திலிருந்து தனக்கென தனது சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒரு புது விஷயத்தை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்ததோடு அதில் மிகச் சிறந்த முறையில் வெற்றியும் கண்டு வருகின்றார்.

கைதி, லியோ மற்றும் விக்ரம் என மூன்று படங்களை இயக்கி தன்னுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸ் தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய விஷயமாக மாற்றி உள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், தன்னுடைய சினிமாட்டிக் யுனிவர்சுக்குள் களம் இறங்கும் புதிய ஹீரோ குறித்த அப்டேட் ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருவதோடு இந்த படம் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

d_i_a

அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி ஆன நேற்றைய தினம் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடிய ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் என்ற திரைப்படம் தொடர்பில் அறிவிப்புக்கள் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.


இவ்வாறான நிலையிலே தன்னுடைய சினிமாட்டிக் யுனிவர்ஷில்  இந்த பென்ஸ் திரைப்படம் வருவதாகவும் 'மாஸ்டர் உங்களை அன்போடு எனது உலகிற்கு வரவேற்கிறேன்' என்றும் ஒரு அசத்தலான வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதேபோல ராகவா லாரன்ஸும் தனது இன்ஸ்டா  பக்கத்தில் இந்த படம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் இந்த படம் எல் சி யூ வில் இடம்பெறும் என லோகேஷ் கடகராஜ் அறிவித்துள்ளதோடு இந்த படத்திற்கான கதையும் லோகேஷ் தான் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement