• Dec 27 2024

TVK மாநாட்டில் கண்ணீரோடு நின்றாரா சங்கீதா விஜய்..? இணையத்தில் புகையும் தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்விரவாண்டியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. இதில் விஜய் பேசிய அதிரடிப் பேச்சுக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் அதிகாரப்பூர்வமாகவே ஆரம்பித்தார். அதன் பிறகு கட்சிக்கொடி, கட்சி அறிக்கை என அனைத்தையும் ஒவ்வொன்றாக வெளியிட்டார். அதன் பின்பு தான் சினிமாவில் இருந்து விலகி முற்று முழுதாகவே அரசியலில் பயணிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதை தொடர்ந்து விஜய் நடித்த கோட் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதையே கவனம் செலுத்திய விஜய் அந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அதன் பின்பு தனது 69 ஆவது படமான எச். வினோத் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

d_i_a

இதற்கு இடையில் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்த விஜய் இந்த கட்சி தொடர்பான கொள்கைகள், செயல் திட்டங்கள் என்பவற்றை வெளியிடாமல் இருக்கிறார். இது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக தனது கட்சிக் கொள்கைகள் செயல் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறினார்.


விஜய் நடத்திய முதலாவது மாநாட்டிற்கு அவரது பெற்றோர் வந்திருந்தார்கள். ஆனால் அவருடைய மனைவி பிள்ளைகள் வரவில்லை என பேசப்பட்டது. மேலும் சங்கீதா அவரை பிரிந்ததாகவும் அதனால் தான் வரவில்லை எனவும் கூறப்பட்டது. எனினும் அதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை .

இந்த நிலையில், தற்போது தளபதி விஜய் நடத்திய முதலாவது மாநில மாநாட்டிற்கு அவருடைய மனைவி வந்திருந்ததாகவும் கூட்டத்தில் நின்று விஜய் பேசிய விஜய் பார்த்து கண்ணீரோடு நின்றதாகவும் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலானது என்று கூறப்பட்ட போதும் இந்த தகவலும் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Advertisement

Advertisement