• Jul 23 2025

தனது 'பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்' பற்றி மனம் திறந்த மாதவன்! என்ன எல்லாம் செய்திருக்கார் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் மாதவன். ஆனாலும் அதற்கு முன்பே ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கில மொழி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

2000 ஆண்டு கால பகுதிகளில் சாக்லேட் பாயாக காணப்பட்ட இவர், மின்னலே, பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற மெகா ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்திருந்தார்.

கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் பயணித்து வரும் நடிகர் மாதவன், அவ்வப்போது சில திரைப்படங்களை இயக்குவதும் உண்டு. தற்போது பெரிய அளவில் ஹிந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், தான் எவ்வாறு "பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்" செய்தேன் என்பது பற்றி பேசியுள்ளார்.  


அதன்படி அவர் கூறுகையில், உணவு உட்கொள்ளாமல் வயிற்றை அவ்வப்போது காய போட கற்றுக்கொள்ள வேண்டும். தான் உண்ணும் உணவுகளை குறைந்தது 45 முதல் 60 முறை நன்றாக மென்று தான் உண்ணுவேன். அதுவும் சமைத்து உணவாக மட்டுமே இருக்க வேண்டும்.

முடிந்தால் காலையில் நெடுந் தூரம் நடந்து பழகுங்கள். பொதுவாகவே தூங்கச் செல்ல முன்பு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னரே உங்களது செல்போன்களை மற்றும் பிற  எலக்ட்ரானிக் சாதனங்களை தள்ளி வைத்து விடுங்கள்.

அதிக அளவில் பச்சை காய்கறிகளை மதிய வேளையில் எடுத்துக் கொள்ளுங்கள். இதுவே என் உடல் மாற்றியதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement