• Dec 26 2024

ராஜமெளலிக்கு ஒத்துழைக்க சொல்லி அவரது மனைவியே கெஞ்சினார்: ‘மகாராஜா’ நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் ராஜமெளலிக்கு ஒத்துழைக்க சொல்லி அவரது மனைவி என்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டார் என்று ‘மகாராஜா’ படத்தில் நடித்த நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ் என்பதும் இவர் ஏற்கனவே அருண் விஜய்யின் ’தடையற தாக்க’ உட்பட சில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் தான் நடித்ததாகவும் பிரமாண்டமாக உருவாகிய அந்த படத்தில் மிகவும் ஆபாசமான காஸ்ட்யூம் கொடுத்து என்னை ராஜமெளலி அணிய சொன்னார் என்றும் அப்போது நான் மிகவும் தயங்கினேன் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



ஆனால் அதே நேரத்தில் ராஜமெளலி தான் சொல்வதை கேட்காத நடிகர்களை பயங்கரமாக திட்டுவார் என்று கேள்விப்பட்டதால் வேறு வழியின்றி அந்த உடையை அணிந்து நடித்தேன் என்றும் அந்த செட்டில் சுமார் 200 பேர்கள் இருந்த நிலையில் அந்த உடையுடன் நடிக்க எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் ராஜமெளலி மனைவி என்னுடைய நிலையை பார்த்து என்னிடம் வந்து ’ராஜமெளலி ஒரு சினிமா பைத்தியம், அவர் ஒரு கேரக்டர் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான் அப்படி சொல்லி இருப்பார், எனவே அவர் கூறியபடி அவருக்கு நடிப்பில் ஒத்துழைப்பு கொடு, கண்டிப்பாக உனக்கும் அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்’ என்று கூறியதாகவும் அதன் பிறகு நான் ’சரி, அவர் சொல்படி கேட்கிறேன்’ என்று நடித்ததாகவும் அந்த பேட்டியில் மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement