விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு வழியாக ஒரு சில மாற்றங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் சீசனின் இருந்தே நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் விலக அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் நடுவராக நுழைந்தார். மேலும் வெங்கடேஷ் பட்டுடன் ஒரு சில கோமாளிகளும் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு மாறி இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ரக்சன் உடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்கி வந்தார். ஆரம்பத்தில் இருந்து அசத்தலாக சென்ற இந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூடு பிடித்தது. இதனால் நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை அதிரடியாக வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகி புதிய சேனல் ஒன்றுக்கு மாறி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க உள்ளாராம். இந்த நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்கி வரும் நிலையில் அவருடன் இணைந்து மணிமேகலையும் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!