• Dec 27 2024

சூப்பர் ஸ்டாருக்கு திருமண பத்திரிக்கை வைத்த மேகா ஆகாஷ்! வெளியான போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை மேகா ஆகாஷ். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது காதலருடன் நிச்சயம் நடந்ததாக இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர், சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை.

அதன் பின்பு மேகா ஆகாஷ் - தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்ற அளவிற்கு படம் வரவேற்பு பெறவில்லை. எனினும் அவருடைய நடிப்பு இப்படத்தில் பெரிதாக பேசப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் சிறிய இடைவேளை விட்டு மீண்டும் நடித்து வந்தார். அந்த வகையில் பிப்ரவரி மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்தார். ஆனாலும் அந்தப் படங்களும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.


இதைத்தொடர்ந்து தற்போது மேகா ஆகாஷின் காதலர் சாய்  விஷ்ணு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசரின் மகன் என்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்ட வருகின்றது.

இந்த நிலையில், இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து தமது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement