• Dec 25 2024

என்னது கமலஹாசனுக்கு 105 வயதா... அது எப்படி சாத்தியமாகும்... குழப்பத்தில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியன் பாகம் ஒன்று மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது இந்தியன் பாகம் 2 படம்பிடிப்புகள் அதிரடியாக நடந்து வருகிறது இந்நிலையில் நடிகர் கமலஹாசனுக்கு அதிக வயதாகி விட்டது  என்ற செய்தி கிளம்பியுள்ளது.


ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ராகுல் ப்ரீத் சிங், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படத்திலிருந்து கமலின் இன்ட்ரோ வீடியோ நேற்று வெளிவந்தது. இந்தியன் முதல் பாகத்தில் எப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை சேனாபதி தண்டித்தாரோ அதே போல் தற்போது இரண்டாவது பாகத்திலும் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.


இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் சேனாபதி கதாபாத்திரத்திற்கு கிட்டதட்ட 105 வயது ஆகிறது. இந்தியன் படத்தின் கதையின்படி சேனாபதி கதாபாத்திரம் 1918ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர் என்பதெல்லாம் அனைவரும் அறிவோம்.

இப்படியிருக்கையில் ரசிகர்கள் பலரும், சேனாபதிக்கு 105 வயது ஆகிறது இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்பட ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். 


Advertisement

Advertisement