• Dec 26 2024

பிரேம்ஜி கல்யாணத்தால் விஜய்க்கு ஏற்பட்ட சிக்கல்.. கோபத்தில் ஃபாரின் சென்ற தளபதி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரேம்ஜி திருமணம் காரணமாக விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் பாதிக்கப்பட்டதை அடுத்து கோபமடைந்த விஜய் திடீரென ஃபாரினுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து அடுத்த கட்டமாக தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை அளிக்கும் விழாவுக்கு முன்பே ’கோட்’ படத்தின் தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்துவிட வேண்டும் என்று விஜய் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் வெங்கட் பிரபு தனது சகோதரர் பிரேம்ஜி திருமண வேலையில் பிஸியாக இருந்ததால் அவர் தொழில்நுட்ப பணிகளை ஒத்தி போட்டதாகவும் குறிப்பாக விஜய்யின் டப்பிங் பணியையும் ஒத்தி போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த விஜய் கோபத்தில் திடீரென ஃபாரின் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் 10 நாட்கள் வெளிநாட்டில் இருப்பார் என்றும் தனது பிறந்தநாளின் போது தான் அவர் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா திரும்பிய பின்னர் அவர் ’கோட்’ படத்தின் தனது பகுதியில் டப்பிங் பணியை தொடங்குவார் என்றும் அதன் பிறகு செகண்ட் சிங்கிள் உள்ளிட்ட பிரமோஷன் பணிகளும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது வெங்கட் பிரபு தனது சகோதரர் பிரேம்ஜியின் திருமண பணியை முடித்து விட்டதன் காரணமாக அடுத்தகட்டமாக ’கோட்’ படத்தின் பணிகளை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.  

மொத்தத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 5 என்ற ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதற்குள் படத்தை முடித்து தயாரிப்பாளரிடம் வெங்கட் பரப்பு கொடுத்து விட உறுதியாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது  

Advertisement

Advertisement