• Dec 26 2024

எனக்கு சினிமா போதுமென விவாகரத்து கேட்ட மிஷ்கின்..! ஆனா நடந்தது இது தான்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட்ட இயக்குனர்களுள்  ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் மிஷ்கின். இவர்  நடிகராகவும் காணப்படுகின்றார். முகமூடி, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ, பிசாசு, சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் .

இதில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் மொத்த உரிமையையும் விஷாலுக்கு கொடுத்து விட்டு விலகி உள்ளார். இதை தொடர்ந்து பிசாசு 2 உருவாக உள்ளது.

இவர் இயக்கும் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அதே அளவுக்கு மிஷ்கினின் நடிப்புக்கு மிகபெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஓநாயும் ஆ ட்டுக்குட்டி சவரக்கத்தி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும்  அட்டகாசமாக நடித்திருப்பார்.

இயக்குனர் மிஷ்கினின் இயற்பெயர்  சண்முகராஜா. இவர் தனது பெயரை மிஷ்கின் என மாற்றினார், இவருக்கு திருமணம் ஆகி ஒரு  மகள் உள்ளார். 


இந்த நிலையில் தனது மனைவியை பிரிந்து செல்ல முடிவெடுத்து மிஷ்கின் இது தொடர்பாக மனைவியிடம் கூறியபோது, எனக்கு விவாகரத்து கொடுத்து விடு நான் சினிமாவில் எனது ஆர்வத்தை காட்ட நினைக்கின்றேன். என்னால் குடும்பத்தின் மீது காட்ட முடியவில்லை. எனவே தயவு செய்து விவாகரத்து கொடுக்க வேண்டும் என கேட்டதாகவும், ஆனால் தனது மனைவி விவாகரத்துக் கொடுக்க முடியாது என்று சொல்லி ரொம்ப அழுததாகவும் அதிலிருந்து தான் விவாகரத்து கேட்கவில்லை ஏனென்றால் அதில் இருக்கிற நியாயம் எனக்கு புரிந்தது. இப்பவும் நாங்கள் பிரிந்து தான் வாழுகின்றோம். எங்களுடைய மகள் எங்களுக்கு பாலமாக இருக்கின்றார். எனவே நான் அவருக்கு விவாகரத்துக் கொடுக்கவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் தனது மனைவி தரப்பில் முன் வைக்கப்பட்ட நியாயத்தை மிஷ்கின் ஆதரித்தமைக்கு பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement