• Jun 07 2025

இதுவரை யாருக்கும் கிடைக்காத சம்பளம்.. அட்லியை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதுவரை எந்த ஒரு இயக்குனருக்கும் கொடுக்காத சம்பளத்தை கொடுத்து இயக்குனர் அட்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பாக தற்போது உருவாகி வரும் ’புஷ்பா 2’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அடுத்ததாக தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க வேண்டும் என்று அவரிடம் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதுவரை இந்திய திரையுலகில் யாரும் வாங்காத சம்பளத்தை அட்லிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கொடுக்க இருப்பதாகவும் ஒரு மிகப்பெரிய தொகை அட்வான்ஸ் ஆக அட்லிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அட்லி மற்றும் அல்லு அர்ஜுன்   ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த படத்தை தான் அனேகமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்  தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் உள்பட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement