• Dec 27 2024

பெரிய ஸ்டார் என்றா திமிரா? முதியவரை இழுத்துவீசிய நாகர்ஜுனாவின் பாதுகாவலர்! வீடியோ வைரல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நாகர்ஜுனா. இவர் தற்போது தனுசுடன் குபேரா படத்தில் நடித்து வருகின்றார்.

குபேரா படத்தின் ஷூட்டிங்கிற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ், தனுஷின் மகன் ஆகியோர் ஏர்போர்ட்டில் இருந்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில், நாகர்ஜுனா வரும் போது வயது முதிர்ந்த ரசிகர் ஒருவர் அவர் அருகில் செல்ல,  நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த முதியவரை இழுத்து கீழே தள்ளி விடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.


குறித்த முதியவர் அருகில் வரும்போது அவரை பார்த்தும் பார்க்காதது போல நாகர்ஜுனா நிற்காமல் செல்ல, அவருக்கு பின்னால் வந்த தனுஷும் இதை கண்டு கொள்ளவில்லை.

இதன்போது நாகர்ஜுனாவின் பாதுகாவலர் குறித்த முதியவரை தள்ளிவிட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி நாகர்ஜுனாவை வறுத்தெடுத்து வருகின்றார்கள்.

எனினும், இந்த வீடியோ வைரலான நிலையில், இதை பார்த்த  நாகர்ஜுனா அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் இனிமேல் இப்படி நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement