• Dec 26 2024

நமிதாவை திருமணம் செய்ய கூடாதுன்னு 100 பேருக்கு மேல என்னை மிரட்டினாங்க: கணவரின் அதிர்ச்சி பேட்டி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை நமிதா மற்றும் வீரேந்திர சவுத்ரி ஆகிய இருவரும் பல ஆண்டுகள் காதலித்து அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வீரேந்திர சவுத்ரி, நமீதாவை திருமணம் செய்யக்கூடாது என 100 பேருக்கு மேல் என்னை மிரட்டினார்கள் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் நடித்த ’எங்கள் அண்ணா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதன் பின்னர் விஜய்யுடன் ’அழகிய தமிழ் மகன்’ அஜித்துடன் ’பில்லா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த நமிதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் நமிதா  மற்றும் வீரேந்திர சவுத்ரி ஆகிய இருவரும் பேட்டி அளித்த போது ’உங்கள் திருமணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கூறுங்கள் என்று கேட்டபோது ’நமிதாவை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்ற செய்தி வெளியானதும் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 பேருக்கு மேல் வந்து மிரட்டினார்கள். எங்கள் மச்சானை எப்படி திருமணம் செய்வது கொள்ளலாம்? எங்கள் செல்லத்தை விட்டு விடு? என்று சிலர் கமெண்ட்களில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் நாங்கள் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்ததால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று காமெடியாக கூறினார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நீங்கள் மிகவும் கிளாமராக நடித்தீர்களே என்று நமிதாவிடம் கேட்ட போது குறுக்கிட்ட அவரது கணவர், ‘அந்த நேரத்தில் எல்லாம் நான் நமிதாவை பார்க்கவில்லை, அப்போதே பார்த்திருந்தால் அவரைக் கொத்திக் கொண்டு போய் இருப்பேன்’ என்று காமெடியாக கூறியதை அடுத்து ’ஆண்கள் எப்போதும் இப்படித்தான், மாறவே மாட்டார்கள்’ என்று நமிதா கூறிய பதில் கலகலப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement