• Dec 26 2024

விஜய் மாதிரி புத்திசாலி எதிரியுடன் மோதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்: நமீதா

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் மிகவும் புத்திசாலி, ஆனால் அதே நேரத்தில் புத்திசாலியுடன் மோதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகை நமீதா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீலகிரியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எல் முருகன் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை நமீதா அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கூறிய போது ’விஜய் மிகவும் புத்திசாலி, ஆனால் அதே நேரத்தில் அரசியல் எதிரியாக ஒரு புத்திசாலியுடன் மோதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்தார். 

மேலும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு தான் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் அவருடைய கட்சி மென்மேலும் வளர எனது அன்பான வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

விஜய் கட்சி ஆரம்பித்ததே பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய தான் என்று கூறப்பட்ட நிலையில் விஜய் ஒரு புத்திசாலி அவருடன் மோதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என நமீதா பேட்டி அளித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் போது விஜய் கட்சியினர் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் போது அவர்களை எதிர்த்து நமீதா பிரச்சாரம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் விஜய்யுடன் நடிகை நமீதா ’அழகிய தமிழ் மகன்’ என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement