• Dec 26 2024

விவாகரத்து மனு கொடுத்த மறுநாளே ஐஸ்வர்யா ரஜினி செய்த வேலையை பாருங்க.. இந்த ஒன்பதும் வேண்டுமாம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று விவாகரத்து மனுவை தாக்கல் செய்த நிலையில் இன்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஸ்டேட்டஸ்க்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ரஜினியின் குடும்பத்திற்கு விருப்பமில்லை என்றாலும் ஐஸ்வர்யா விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அந்த கருத்து வேறுபாடு ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா தரப்பில் இருந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் திடீரென நேற்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் தங்களது விவாகரத்திற்கு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்னும் ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொருவரும் இந்த ஒன்பது அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தினமும் 9ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும், 8 மணி நேரம் தூங்க வேண்டும், 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், ஆறு நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும், ஐந்து விதமான பழங்கள் சாப்பிட வேண்டும், நான்கு முறை மூளைக்கு பிரேக் கொடுக்க வேண்டும், ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சாப்பிட வேண்டும், தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் செல்போன் பார்ப்பதை நிறுத்தி விட வேண்டும், தினமும் ஒரு முறை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் இந்த ஒன்பது அம்சங்களை கடைபிடித்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் முதலில் கணவன் மற்றும் குடும்பத்தோடு வாழ பழகிக் கொள்ளுங்கள், அதன் பிறகு இந்த ஒன்பது அம்சங்களை கடைபிடிக்கலாம் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement