• Apr 24 2026

எவ்வளவு கோடி சம்பாதித்தாலும்.. அந்த சந்தோசம் கிடைக்காது.! - அனிருத் ஓபன்டாக்

shali / 2 months ago

Advertisement

Listen News!

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் அனிருத் ரவிச்சந்தர். தனது தனித்துவமான இசை பாணி, இளம் ரசிகர்களை கவரும் மெலடிகள் மற்றும் மாஸான பாடல்கள் மூலம் மிகக் குறுகிய காலத்தில் உச்சத்தை எட்டியவர். தற்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் அனிருத், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்துப் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் சிறுவயது முதலே இசையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். படிப்புடன் சேர்த்து இசையும் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. அந்த காலகட்டத்தில் இசை தான் தனது எதிர்காலம் என்று அவர் எண்ணியதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.


சினிமாவில் நுழைந்த பின் அனிருத், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தார். அவரது பாடல்கள் வெளியான உடனே சமூக ஊடகங்களில் டிரெண்டாகி, இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இன்று தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் பிஸியாக இசையமைத்து வருகிறார். இதன் மூலம் அனிருத் தற்போது பல கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையை அடைந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அனிருத், தனது ஆரம்ப கால வாழ்க்கையை நினைவுகூர்ந்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அந்த பேட்டியில், “சின்ன வயசில கல்யாணத்துக்கு வாசிக்க போன போது, 500 ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க. சில நேரம் அது கூட முழுசா கொடுக்க மாட்டாங்க. வெறும் வெத்தலை பாக்கு மட்டும் கொடுத்து, நன்றி சொல்லி அனுப்பிடுவாங்க. இப்போது எவ்வளவு கோடி சம்பாதித்தாலும், அந்த சந்தோசம் கிடைப்பதில்லை.” என்று கூறியுள்ளார். 

இந்த கருத்து, பணம் மட்டுமே வாழ்க்கையின் முழு மகிழ்ச்சியல்ல என்பதைக் கூறும் வகையில் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement