• Dec 26 2024

சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்ல.. நேரம் தான் வீண்..! ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த திரைப்படம் தான் போட். இந்த படத்தில் யோகி பாபு உடன் கௌரி கிஷன், சாம்ஸ், மதுமிதா, எம் .எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

1943 ஆம் காலகட்டத்தில் இருந்து இந்த படம் ஆரம்பிக்கின்றது. அதன்படி ஜப்பான் இந்தியாவில் இருக்கும் ஒரு பெரிய நகரம் மீது குண்டு வீசி அழிக்கப் போவதாக தகவல் வெளிவர, அந்த நேரத்தில் மெட்ராஸ் மீதும் குண்டு போடப் போவதாக தகவல் வெளியாகி  இருந்தது. அதிலிருந்து தப்பிக்க சில நாட்கள் கடலில் இருக்கலாம் பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு திரும்பி வரலாம் என்று யோகி பாபு தனது பாட்டியை கூட்டிக்கொண்டு போடில் கடலுக்கு செல்லுகின்றார்.

அந்த நேரத்தில் பலர் உதவி கேட்டு வர அவர்களும் அந்த போட்டில் பயணம் செய்கின்றார்கள். போட் நடுகடலில் இருக்கும் போது கப்பல் விபத்தில் சிக்கிய வெள்ளைக்காரன் அந்த போட்டில் ஏறி  விடுகின்றார். அதில் பயணம் செய்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையும், எண்ணமும் காணப்படுகின்றது. கடைசியில் அவர்கள் அனைவரும் போர் முடிந்து கரை சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை.


போட்டில் பயணம் செய்யும்போது சாதி,மதம், வன்முறை, அரசியலின் அனைத்தையும் பற்றி பேசுகிறார்கள். இவை எல்லாமே இயல்பாக இல்லாமல் வலுக்கட்டாயமாக புகுத்துவது  போல காணப்படுகின்றது. மேலும் படகில் ஓட்டை வந்து சுவாரஸ்யத்தை காட்டுவதாக காட்சியை நகர்த்தி விட்டு பின் திமிங்கலம் அந்த படகை சுத்தி வருவதாக காட்டுகிறார்கள். அதை பார்ப்பதற்கே மிகவும் போராக காணப்படுகிறது. யோகி பாபுவின் நடிப்பும்  சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

படத்தில் ஆரம்பம் நல்லாத்தான் இருந்தது படத்துக்கு வந்திருக்கிறோம் என்று நம்பிக்கை கொடுத்தது. அதைப்போல படம் ஆக்கப்பட்ட விதமும் கிராபிக் காட்சி என அனைத்தும் நன்றாக இருந்தது. ஆனால் படத்தின் கதையும் திரைக்கதையும் இல்லாததால் நேரம் தான் வீண் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Advertisement

Advertisement