• Dec 26 2024

பழங்கால முறைப்படி அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்! திருமண தேதியும் திடீர் அறிவிப்பு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ் சிறுவயதிலிருந்து தசைச் சிதை வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அவருக்கு திருமணம் செய்வது பற்றி இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் அதையெல்லாம் கடந்து தன்னுடைய மகனுக்கு திருமணத்தை தடபுடலாக செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றார் நெப்போலியன்.

சில தினங்களுக்கு முன்பு தான் நெப்போலியன் அவருடைய மகன் எங்கேஜ்மென்டில் தான் எதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை மருமகளாக ஏற்கின்றேன் என்று பேசிய வீடியோ வெளியாகி இருந்தது. அதில் தான் கடல் கடந்து சென்றாலும் தமிழ் முறையை மறக்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.


இந்த நிலையில், தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண பத்திரிக்கை வீடியோவாக வெளியாகி உள்ளதோடு, அது பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு காணப்படுகிறது.

மேலும் இவர்களுடைய திருமணம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் தேதி ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருவதோடு பத்திரிகையும் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement