• Dec 26 2024

கோபியின் மாயவலையில் சிக்கிய பாக்கியா.? பரபரப்பான திருப்பத்தில் பாக்கியலட்சுமி சீரியல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ஏற்கனவே பாக்கியா தனது ரெஸ்டாரண்டுக்கு புதிய செப் ஒருவரை வேலைக்கு வைப்பதற்காக திட்டமிட்டுள்ளார். அதன்படி அதற்காக புதிய செப்பை தேடுவதற்கான முயற்சியில் காணப்படுகின்றார்.

இதை அறிந்த கோபி அவருடைய கிச்சனில் வேலை செய்த ஒருவரை இனி இங்கு உங்களுக்கு வேலை இல்லை நான் சொல்லும் இடத்தில் வேலை செய்யுமாறு சொல்கின்றார். அப்படியே அவரும் பாக்கியாவின் ரெஸ்டாரண்டிற்கு செல்கின்றார்.


இவ்வாறு பாக்கியா குறித்த செப்பை தனது ரெஸ்டாரண்டிற்கு ஏற்றுக் கொள்கின்றார். இதனை அவர் கோபிக்கு போன் பண்ணி சொல்ல, அவரும் வாழ்த்துக்கள் சொல்லி நான் அனுப்பிய ஆள் என்று தெரியக்கூடாது என கண்டிஷன் போடுகின்றார்.

அதன்படி கோபி பாக்கியாவை ஒழித்து கட்டுவதற்காக தனது கிச்சனில் வேலை செய்த செப்பை அங்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை வைத்து பாக்கியாவை வீட்டார்களிடமிருந்து பிரித்து நடுத்தெருவுக்கு கொண்டு வருவதற்காக சபதம் எடுத்துள்ளார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement