• Dec 26 2024

கேரளாவில் மிக எளிமையாக நடந்த ராயன் பட நடிகரின் திருமணம்! இணையத்தை கவர்ந்த போட்டோஸ்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக காணப்பட்டவர் தான் ஜெயராம். இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகராக காணப்படுகின்றார். தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இறுதியாக விஜய் நடித்த கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

ஜெயராமின் மகளது திருமணம் கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய மகனான காளிதாஸ் ஜெயராமுக்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

காளிதாஸ் ஜெயராம் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் பாவ கதைகள், ராயன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் நீண்ட நாட்களாகவே தாரிணி என்பவரை காதலித்து வந்தார்.


இந்த நிலையில், காளிதாஸ் - தாரிணி தம்பதியினரின் திருமணம் இன்றைய தினம் டிசம்பர் 8ம் தேதி கேரளாவில் குருவாயூர் கோயிலில் மிக எளிமையாக நடைபெற்று உள்ளது. இவர்களுடைய ஆடையும் பாரம்பரிய முறையில் காணப்பட்டுள்ளது.


தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு இந்த தம்பதியினருக்கு பல பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


தனது மகனின் ப்ரீ வெடிங்கில் எமோஷனலாக பேசிய ஜெயராம், எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள். காளியின்  திருமணம் எங்களுக்கு ஒரு கனவு. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றும் தாரிணி எங்களுடைய மகளாக மாறி உள்ளார் என்றும் மிக எமோஷனலாக பேசியிருந்தார்.

மேலும் இவர்களுடைய திருமணம் இரு வீட்டார்களுக்கு முன்னிலையிலும் நெருங்கிய உறவினர்களுடனும் நடைபெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement