• Dec 25 2024

துபாயில் இருந்து பாக்கியாவுக்கு பழனி கொடுத்த ஆர்டர்..? கர்வத்தில் துள்ளிக் கொதித்த கோபி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டுக்கு வந்த எழில் தனது படத்திற்கு பூஜை வைத்திருப்பதாக சொல்லி மகிழ்கின்றார். இதைக் கேட்டு பாக்கியா, ஈஸ்வரி சந்தோஷப்பட, நீங்கதான் பட பூஜையின் போது விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று எழில் சொல்லுகின்றார்.

இதை கேட்ட ஈஸ்வரி தன்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும் ஆனால் தான் பட பூஜை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லுகின்றார்.  ஏன் என்மேல் கோபமா என எழில் கேட்க, இனியா பாட்டி இப்படித்தான் ரூமுக்குலயே இருக்கிறாங்க.. எதுலயும் கலந்து கொள்ள மாட்டேன் என்றாங்க  என சொல்லுகின்றார். 

மேலும் பாக்கியாவும் இந்த ஆயுத பூஜைக்கு பிறகு பாட்டி சரியாகி விடுவாங்க என்று நம்பிக்கை கொடுக்கின்றார். இன்னொரு பக்கம் கோபி எழிலின் ப்ரொடியூசரை சந்தித்து பட பூஜை பற்றி அறிந்து கொள்கின்றார்.

d_i_a

இதன் போது பட பூஜையில் கலந்த கொள்ள உள்ளவர்களின் நேம் லிஸ்ட்டை ப்ரொடியூசர் கோபிக்கு கொடுக்க, அதில் பாக்யாவின் பெயர் இருப்பதையும் பார்த்து கோபப்படுகின்றார். மேலும் தனக்காக ஒரு உதவி பண்ணுமாறும், ஈஸ்வரி இந்த பட பூஜைக்கு வரவேண்டும் ஆனால் பாக்கியா வரக்கூடாது என்று சொல்கின்றார்.


இதை கேட்ட ப்ரொடியூசர் எழில் இதுக்கு சம்மதிக்க மாட்டான் என்று சொல்ல, எப்படியாவது சம்மதிக்க வையுங்கள் என்று கோபி சொல்லிச் செல்கின்றார். மேலும் இனியாவும் செழியனும் என்னுடைய பக்கம் வந்து விட்டார்கள்.. பாக்கியாவின் ரெஸ்டாரண்டை குழப்ப செஃப் அங்கேயே இருக்கின்றார்.. இதனால் பாக்கியாவை கூடிய சீக்கிரம்  நடுநோட்டுக்கு கொண்டு வரலாம் என கனவு காணுகின்றார்..

இறுதியாக பாக்கியா பேங்க் மேனேஜரிடம் சென்று அவர்களுடைய ஸ்டாப்புக்கு கொடுப்பதற்கான ஸ்வீட்  ஆர்டரை எடுக்கின்றார்.. அதன்படியே அவருக்கு 250 ஓனர் கிடைக்கின்றது. அந்த நேரத்தில் பழனிச்சாமியும் தனக்கும் ஸ்வீட் ஓடர் வேண்டும் என துபாயில் இருந்து பாக்கியாவுக்கு ஓடர் கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement