• Dec 26 2024

பை நிறைய நகைகளை கொடுத்து விட்டு செல்லும் மீனா அம்மா.. பிரிந்த உறவுகள் கூடுமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா பை நிறைய நகைகளை கொடுத்து விட்டு செல்லும் காட்சிகள், அதன் பிறகு அந்த நகைகளை வாங்கி சந்தோஷம் அடையும் மீனா தனது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி மகிழ்ச்சி அடையும் காட்சிகள், தங்க மயில் மற்றும் அவருடைய பெற்றோர் கல்யாண புடவை எடுப்பதற்காக கிளம்பும் காட்சிகள், கல்யாண புடவை எவ்வளவு ரேட்டில் எடுப்பது என்று பாண்டியன் தனது குடும்பத்தார் இடம் ஆலோசனை செய்யும் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுக்க மீனாவும் அவரது கணவரும் மீனாவின் வீட்டுக்கு சென்றபோது மீனாவின் அப்பா இருவரையும் அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். அதன் பிறகு கோமதி, மீனாவின் அம்மா வீட்டிற்கு சென்று மீனா மிகவும் மனது உடைந்து போய் இருக்கிறார், நீங்கள் அவர் மீனாவிடம் பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதனை அடுத்து மீனாவின் அம்மா நகைகளை எடுத்துக்கொண்டு மீனாவின் வீட்டிற்கு வருவதோடு நேற்றைய எபிசோடு முடிந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா, பை நிறைய நகைகளை மீனாவிடம் கொடுத்து இது உனக்கு சேர வேண்டிய நகை, உனக்காக சேர்த்து வைத்த நகை, வைத்துக்கொள் என்று கொடுக்கிறார்.



அப்பாவுக்கு தெரியுமா என்று மீனா கேட்டபோது ’அவருக்கு தெரியாது, அப்படியே தெரிந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு வீட்டிற்குள் கூட செல்லாமல் சென்று விடுகிறார். இதனை அடுத்து மீனா தனது அத்தையிடமும், ராஜியிடமும் எனக்கு இப்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, இப்போது என் அம்மா வந்துவிட்டார், அடுத்தது அப்பாவும் வந்து விடுவார், பிரிந்த உறவுகள் சேரும், எங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்’ என்று மகிழ்ச்சியுடன் கூறுவதை கேட்டு கோமதி, ராஜி ஆகியோர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு சேலை எடுப்பதற்காக தங்கமயில் மற்றும் அவரது பெற்றோர் கிளம்பும் நிலையில் ’நமக்கு பிடித்த மாதிரி நிறைய விலையில் சேலை எடுக்க வேண்டும் என்று பாக்கியம் ஏத்தி விடுகிறார். நிச்சயத்திற்கு அவர்கள் இஷ்டத்திற்கு எடுத்த மாதிரி, கல்யாணத்திற்கு எடுக்க விடக்கூடாது’ என்று பாக்கியம் கூறுகிறார்.

இதனை அடுத்து பாண்டியன் தனது குடும்பத்தாரிடம் கல்யாணத்திற்கு எவ்வளவு ரேட்டில் புடவை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்கிறார். அப்போது மீனா ’அது நம்ம இஷ்டம் தான், 50,000க்கும் எடுக்கலாம், 5 லட்சத்திற்கும் எடுக்கலாம் என்று கூற, அவ்வளவு ரேட்டுக்கு எல்லாம் எடுக்க முடியாது அதிகபட்சமாக 25 ஆயிரம் தான் என்று பாண்டியன் கூற குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இதனை அடுத்து எல்லோருக்கும் எந்த ரேட்டில் புடவை எடுக்கலாம் என்று ஆலோசனை செய்யும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisement

Advertisement