• Dec 27 2024

மீனாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய 12.30 மணி.. முத்துவை காப்பாற்ற எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் முத்து குடித்துவிட்டதாக வீடியோ வைரலான நிலையில் முத்துவை மீனா மற்றும் அண்ணாமலை கூட நம்பவில்லை என்ற காட்சிகள் கடந்த சில இரண்டு நாட்களாக ஒளிபரப்பான எபிசோடுகளில் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தான் பாருக்கு சென்றது உண்மைதான் என்றும், ஆனால் குடிக்கவில்லை என்றும், முத்து திரும்பத் திரும்ப சொல்லிய போதிலும் முத்துவை நம்புவதற்கு யாருமே இல்லை, மீனா கூட சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முத்துவை நம்பாதது தான் துரதிஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் மீனாவை சந்திக்கும் சிட்டி, ‘உன் புருஷனை இனிமேல் குடிக்க வேண்டாம் என்ற அறிவுரை சொல், குறிப்பாக 12.30 மணிக்கு குடிக்க வேண்டாம் என்று சொல் என கூறுகிறார். அதேபோல் முத்துவின் நண்பர் செல்வத்தை சந்திக்கும் மீனா ’12.30 மணிக்கு எல்லாம் முத்து இதுவரை குடித்ததே இல்லை என்று கூறுகிறார். சிட்டி, செல்வம் இரண்டு பேருமே 12.30 மணி என்று கூறியதை எடுத்து மீனாவுக்கு சந்தேகம் வந்து அவர் முத்துவை காப்பாற்ற அதிரடி முடிவு எடுப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் முடிவில் மீனா சம்பந்தப்பட்ட பாருக்கு சென்று சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது தனது கணவர் முத்து குடிக்கவில்லை என்றும் சிட்டி தான் முத்துவை தவறாக வீடியோ எடுத்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து முத்து நிரபராதி, அவர் குடிக்கவில்லை என்பதை மீனா நிரூபிப்பார் என்றும் இது குறித்து காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement