• Dec 26 2024

தங்கமயிலுக்கு சரவணன் வைத்த செல்லப்பெயர்.. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய குயிலி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் கல்யாணத்திற்காக தாய் வீட்டிற்கு வரும் குயிலி செய்யும் குழப்பங்கள், இரண்டு மருமகள்களிடம் நீ மாமியார் போலவே நடந்து கொள்ளவில்லை என்று அம்மாவை கண்டிக்கும் காட்சிகள், மீனாவை விட்டுக் கொடுக்காமல் அவரது கணவர் குயிலிடம் பேசும் காட்சிகள் ஆகியவை உள்ளன.

இதனை அடுத்து சரவணன் மற்றும் தங்கமயில் ஃபோனில் உரையாடும் காட்சிகள், தங்க மயிலுக்கு தான் ஒரு செல்லப் பெயர் வைத்துள்ளதாக கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இறுதியாக என்னால் தானே நீ திட்டு வாங்கினாய் என்று தனது கணவரிடம் கூறும் ராஜி உண்மையை சொல்லட்டுமா என்று கூற, உண்மையை சொல்வதால் எதுவும் மாறாது என்று கூறும் காட்சியும் உள்ளன.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை அடைந்து வரும் நிலையில் சரவணன் கல்யாணம் குறித்த பரபரப்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சகோதரரின் கல்யாணத்துக்காக குயிலி தனது குடும்பத்துடன் வரும்போது, தனது அம்மா கோமதியிடம், நீ மாமியாராக இருக்கவே தகுதி இல்லை, நீ இரண்டு மருமகள்களுக்கும் ரொம்ப இடம் கொடுத்து விட்டாய், என்னுடைய மாமியார் என்னை எப்படி கொடுமைப்படுத்துகிறார் தெரியுமா? என்று கூற அதற்கு ராஜி மற்றும் மீனா காமெடியாக கமெண்ட் அடிக்க குயிலி கோபப்படும் காட்சிகளும் உள்ளன. அப்போது மீனாவின் கணவர் வந்து உன்னை பற்றி மீனா பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பார் என்று அளந்து விடும் காமெடியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.



இந்த நிலையில் இரவில் மொட்டை மாடிக்கு தூங்க வரும் சரவணன், தங்கமயில் இடம் போனில் பேசுகிறார். அப்போது உனக்கு நான் ஒரு செல்லப் பெயர் வைத்திருக்கிறேன் என்று கூற. அது என்ன பெயர் என்று தங்கமயில் கேட்க. அதற்கு அவர் ’பொண்டாட்டி’ என்று ரொமான்ஸ் உடன் கூறுகிறார். இதைக்கேட்டு தங்கமயில் வெட்கப்படும் காட்சி உள்ளது.

இந்நிலையில் ராஜி மற்றும் அவரது கணவர் உரையாடல் நடைபெற்று வருகிறது. என்னால் தானே நீங்கள் உங்கள் அப்பாவிடம் திட்டு வாங்குகிறீர்கள், நான் வேண்டுமானால் உண்மையை சொல்லவா, நகைகள் எப்படி தொலைந்தது என்று சொல்லவா? என்று கேட்க அதனால் என்ன மாறிவிட போகிறது, கல்யாணம் நடைபெறும் இந்த நேரத்தில் அதெல்லாம் சொல்ல வேண்டாம், உன் மேல் இப்போதுதான் கொஞ்சம் அன்பும் பாசமும் அப்பா வைத்திருக்கிறார், நீ அதைச் சொன்னால் உன் மேல் கோபப்படுவார், என்னையும் அம்மாவையும் ஏன் உண்மையை மறைத்தீர்கள் என்று திட்டுவார்’ என்று கூற அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement