• Dec 26 2024

விசேஷம் இல்லையா? பாக்கியம் கேள்விக்கு பதிலடி கொடுத்த மீனா - ராஜி.. தப்பு தப்பாய் தங்கமயிலுக்கு யோசனை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் - தங்கமயில் திருமணம் முடிந்து சில சடங்குகள் நடக்கின்றன. அதனை அடுத்து திருமணத்திற்கு வந்த உறவினர்கள் பரிசுகளை மணமக்களுக்கு கொடுத்து வருகின்றனர். அப்போது ஒரு பெண் ராஜியை பார்த்து ’இவ தான் ஓடி வந்த பெண்ணா’ என கேட்க அதற்கு குழலி மற்றும் கோமதி பதிலடி கொடுக்கின்றனர்.

இதனை அடுத்து மணமக்கள் வீட்டார் சாப்பிட உட்காரும்போது பாக்கியம் குத்தலாக ’உங்கள் வீட்டில் இரண்டு மருமகள் வந்து விட்டார்களே, ஆனால் இருவருக்கும் எந்த விசேஷமும் இல்லையா’ என்று கேட்கிறார். அதற்கு கேலியாக மீனா ’நிறைய விசேஷம் நடந்துள்ளது, என்னுடைய திருமணத்திற்கு பிறகு ராஜி திருமணம் நடந்தது, ராஜி திருமணத்திற்கு பிறகு  சரவணன் மாமாவுக்கு திருமணம் நடந்தது, இதெல்லாம் விசேஷம்’ தானே என்று சொல்ல அப்போது பாக்கியம் ’நான் சொல்றது உனக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன் என் தங்கமயில் இடம் நான் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளேன்’ என்று கூற, அதற்கு ராஜி,  ’உடனே எப்படி பெத்துக்க முடியும், பத்து மாசம் ஆகும் இல்ல’ என்று கிண்டலாக பதிலடி கொடுக்க பாக்கியம் வாயை மூடிக் கொள்கிறார்.

இதனை அடுத்து சரவணனுக்கு திருமணம் நடக்கும் வரை செருப்பு போட மாட்டேன் என்று பாண்டியன் சவால் விட்டிருந்த நிலையில் தற்போது திருமணம் நடந்து விட்டதால் பழனியப்பன் அவருக்கு செருப்பு போட்டு விடும் காட்சி நடக்கிறது. இதை பார்த்த பாக்கியம் ‘ஏன் இந்த சவால்? மாப்பிள்ளைக்கு ஏதாவது குறையா? அதனால்தான் திருமணம் நடைபெறவில்லையா? என குத்தலாக கேட்க அப்போது ராஜி ’என்னுடைய வீட்டார் சரவணன் மாமாவுக்கு திருமணம் நடக்க விடாமல் சதி செய்தார்கள், அதனால் தான் மாமா இந்த மாதிரி சபதம் எடுத்தார் என்று கூறுகிறார்.

அதன் பின்னர் பாக்கியம் தங்கமயிலை தனியாக அழைத்து அந்த வீட்டில் உள்ளவர்களை எல்லோரையும் நீ உன் கைக்குள் கொண்டுவர வேண்டும், குறிப்பாக உன் மாமனார் மாமியார் மற்றும் மாப்பிள்ளை மூவரையும் உன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் தானாகவே உனக்கு அங்கு மதிப்பு உயரும், எந்த காரணத்தை முன்னிட்டும் இதை மறந்துடாதே, இந்த வீட்டில் உள்ள இரண்டு மருமகள்களும் பணக்கார வீட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் திமிர் ஜாஸ்தியாக இருக்கிறது அதற்கு பதிலடியாக நீ மாப்பிள்ளையையும் மாமனார் மாமியாரையும் உன்னுடைய கைக்குள் வைத்துக்கொள் என்று தப்பு தப்பாக ஆலோசனை கூறுகிறார்.

இதனை அடுத்து மீனா, கதிர் மற்றும் ராஜி முன்கூட்டியே ஆரத்தி எடுத்து ரெடி செய்வதற்காக வீட்டுக்கு செல்கின்றனர். அப்போது காரில் கதிர் மற்றும் ராஜி அருகருகே உட்கார்ந்து இருக்கும் போது ரொமான்ஸ் ஏற்படும் காட்சிகளும் உள்ளன. நாளைய எபிசோடில் சரவணன் தங்கமயில் ஆகிய இருவரும் புதுமண தம்பதிகளாக வீட்டுக்கு நுழையும் காட்சிகளும்  இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement