• Dec 26 2024

மீனாவை அடுத்து ராஜிக்கும் வந்த நகைகள்.. பாண்டியனின் திடீர் கோபம்.. கவரிங் நகைகளை செட்டப் செய்த பாக்கியம்..

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ராஜிக்கு அவரது அம்மா நகைகளை கொடுத்து அனுப்புவது, அந்த நகைகளை வேண்டாம் என்று கதிர் கூறிய நிலையில் பாண்டியன் கோபமடைவது, தங்கமயில் கல்யாணத்துக்காக கவரிங் நகைகளை பாக்கியம் செட்டப் செய்வது மற்றும் மீனா, ராஜி நகைகளை பார்த்து குழலி பொறாமைப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில்  ராஜியின் அம்மா நகைகளை தனது கொழுந்தனாரிடம் கொடுத்து அனுப்புகிறார். அவர் கொண்டு வந்து ராஜியிடம் கொடுக்கும் போது முதலில் தயங்கும் ராஜி அதன் பிறகு கோமதி சொன்னவுடன் வாங்கி கொள்கிறார்.

அப்போது கதிர் அந்த நகைகளை கொண்டு போய் கொடுத்து விடுங்கள், அவங்களோட நகைகள் எனக்கு வேண்டாம் என்று கூற பாண்டியன் திடீரென ஆவேசப்படுகிறார். அந்த பெண் கொண்டு வந்த நகை பணத்தை எல்லாத்தையும் கொண்டு போய் தொலைத்து விட்டு இப்போது ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய் என்று கூறுகிறார். ஆனால் நடந்த உண்மையை சொல்ல முடியாமல் ராஜி, கோமதி மற்றும் மீனா அமைதியாக உள்ளனர்.



இந்த நிலையில் பாக்கியம் வீட்டில் கவரிங் நகைகளை செட்டப் செய்து திருமணத்திற்காக தயார் செய்து வைத்திருக்கிறார். அதை பார்த்து அச்சப்படும் தங்கமயில் இந்த விஷயம் தெரிந்தால் என்னுடைய வாழ்க்கையே போய்விடுமே என்று புலம்புகிறார். அதெல்லாம் ஒன்றும் நடக்காது என்று பாக்கியம் அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

இந்த நிலையில் ராஜி மற்றும் மீனா ஆகிய இருவரும் அவரவர் அம்மாக்கள் கொடுத்த நகையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கல்யாணத்திற்கு எந்த நகையை போடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது கணவருடன் குழலி வருகிறார். அப்போது இந்த நகைகளால் பார்த்து மறுபடியும் கவரிங் நகைகளை வாங்கிக் கொண்டீர்களா என்று கேலி செய்ய அதற்கு மீனா ’என் அம்மாவும் ராஜி அம்மாவும் வந்து கொடுத்துவிட்டு போனதாகவும், ஒரிஜினல் தங்க நகை என்று கூற குழலி ஆச்சரியம் அடைந்து அந்த நகைகளை பார்த்து பொறாமைப்படும் காட்சியோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement