• Dec 26 2024

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. 'டீன்ஸ்’ படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்த பார்த்திபன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

என் படத்திற்கு நானே வரிவிலக்கு அளிக்கிறேன் என நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது 'டீன்ஸ்’ படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்து இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் நடித்த இயக்கிய 'டீன்ஸ்’ என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் 'டீன்ஸ்’ படத்தை திரையரங்கில் பார்க்க வரும் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையை குறைத்து உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது 'எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, ஆனால் 'டீன்ஸ்’ படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு 100 ரூபாய் மட்டுமே, இதில் எனக்கு நட்டம் இல்லை, வசதி குறைந்தவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அனைத்து திரையரங்களிலும் இந்த படத்திற்கு 100 ரூபாய் மட்டுமே டிக்கெட் வாங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சின்ன பட்ஜெட் படங்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே மாதிரியான டிக்கெட் வாங்கப்படுகிறது என்றும், சின்ன பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையை குறைத்தால் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்த வகையில் முதல் வழிகாட்டியாக பார்த்திபன் தனது படத்திற்கான டிக்கெட் விலையை குறைத்து இருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement