• Dec 25 2024

சன் டிவியில் முடிவுக்கு வரவுள்ள பிரபல சீரியல்.. விரைவில் கிளைமேக்ஸ் காட்சியுடன் மூடுவிழா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மட்டும் இன்றி ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் என்பவற்றுக்கு தனி ரசிகர் கூட்டமே காணப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே கயல், சிங்கப் பெண்ணே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருமகள், மூன்று முடிச்சு ஆகிய சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பெற்று முன்னிலையில் காணப்படுகின்றன.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலின் முதலாவது பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்மும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் நாயகியாக நடித்து மக்களின் மனதை வென்றுள்ளவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். 

இந்த நிலையில், தற்போது சுந்தரி சீரியல் விரைவில் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாக உள்ளதாகவும் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி முற்றிலும் மாறுபட்ட ரீதியில் கதைக்களத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சுந்தரி சீரியல் ஆரம்பத்தில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் சுந்தரி படும் கஷ்டங்கள் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்பன எதார்த்தமாக எடுத்துக்காட்டப்பட்டது.

இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது சுந்தரி சீரியலின் இரண்டாவது பாகமும் விரைவில் கிளைமேக்ஸ் காட்சி ஒளிபரப்பாக்கப்பட்டு முடிவுக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement