• Dec 25 2024

பிரதீப் அந்தோணிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அட்வான்ஸே இத்தனை லட்சமா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட முன்பண செக்கை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக பிரதீப் அந்தோணி இருந்த நிலையில், அவரை மாயா மற்றும் பூர்ணிமா புல்லிங் குரூப் சதி செய்து பெண்களுக்கு ஆபத்தானவர் என்று அபாண்டமான பழி சுமத்தி வெளியேற்றி விட்டது. இந்த புல்லிங் குரூப்புக்கு கமல்ஹாசனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக இருந்தது தான் கொடுமையிலும் கொடுமை என சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் மட்டும் தொடர்ந்து இருந்தால் அவர் தான் டைட்டில் வின்னர் என்ற நிலையில் அவரை சதி செய்து வெளியேற்றிய அத்தனை புல்லிங் கேங்களும் அடுத்தடுத்து வெளியேறினார்கள் என்பதையும் பார்த்தோம்.

 இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத பிரதீப் அந்தோணி தனது திரைப்பட பணிகளை தொடங்கினார் என்பதும் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு அவர் கதை எழுதி வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் ஒப்புக்கொண்டு ரூபாய் 9 லட்சம் அட்வான்ஸ் பெற்றதாகவும் சற்று முன் அவரை தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவில் அவர் மேலும் கூறியதாவது:

இந்த வருஷம் நடிச்சு, கொஞ்சம் காசு சம்பாதிச்சிக்கிலாம்னு, அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். படம் பொறுமையா தான் வரும். எப்போ வரும்னு எல்லாம் கேட்காதீங்க.. வரும்போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க’ என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து பிரதீப் அந்தோணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement