• Dec 26 2024

எல்லாம் ஒரு அளவுக்கு தான்... செல்பி கேட்ட ரசிகரிடம் சீறிய பிரியங்கா மோகன்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை பிரியங்கா மோகன், அதைத்தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். 


தற்போது இவர் ஜெயம் ரவியுடன் பிரதர் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடைபெற்றது. இந்த ஆடியோ லான்ச்சில் செல்பி எடுக்க வந்த ரசிகரை பிரியங்கா மோகன் திட்டிய காட்சி வெளிவந்துள்ளது.


அதாவது, ஆடியோ லான்ச் நடைபெற்ற அரங்கத்தின் உள்ளே உட்கார்ந்திருந்த பிரியங்கா மோகனிடம், அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க வந்த ரசிகரை சிறிது நேரம் கடுமையாக பேசிய காட்சி வெளிவந்துள்ளது. அதன் பிறகு மீண்டும் அவருடன் சிரித்தபடி செல்பி எடுத்துக் கொண்டுள்ளார் பிரியங்கா மோகன். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் பிரியங்கா மோகன் பக்கத்தில் அமர்ந்திருந்த நடிகை சரணியாவிடம் இவர் என் வீடு வரை போலோ செய்துவந்தார் என்றுகூறியுளார்.   





Advertisement

Advertisement