• Dec 26 2024

’சீதாராமன்’ தொடரை அடுத்து ‘நள தமயந்தி’யில் இருந்து விலகுகிறாரா பிரியங்கா? அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஏற்கனவே ’சீதாராமன்’ தொடரில் இருந்து விலகிய நடிகை பிரியங்கா தற்போது ’நள தமயந்தி’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த சீரியலில் இருந்தும் அவர் விலக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’சீதாராமன்’ தொடரிலிருந்து பிரியங்கா திடீரென விலகினார் என்பதும் அவர் விலகியதற்கு என்ன காரணம் என்பது கூட தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதே ஜீ தமிழ் சேனலில் ’நள தமயந்தி’ என்ற தொடரில் தற்போது அவர் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த சீரியலின் கதைக்களம் தற்போது வேறொரு டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது.

இதனால் பிரியங்கா அதிருப்தி அடைந்ததாகவும் அதனால் இந்த சீரியலில் இருந்தும் அவர் விலக போவதாகவும் அவருக்கு பதிலாக ’தெய்வம் தந்த பூவே’ தொடரில் நடித்த ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஸ்ரீநிதியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தியை பதிவு செய்திருந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரியங்கா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். உங்கள் இஷ்டத்துக்கு நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள், ’நளதமயந்தி’ சீரியலில் இருந்து நான் விலகப் போவதாக வதந்திகளையும் பரப்பாதீர்கள், நான் சீரியலில் இருந்து விலகவில்லை, என்னுடைய அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீநிதியின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’என்ன நடந்தது என்பதை நீ விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

தற்போது பிரியங்கா தனது கணவருடன் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு மலேசியா சென்று இருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டே இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இப்போதைக்கு அவர் ’நள தமயந்தி’ சீரியலில் இருந்து விலகவில்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement