• Dec 29 2024

தமிழ் சினிமாவில் முதன் முதலில் கோடியில் சம்பளம் வாங்கியது இவரா? சுவாரஸ்ய தகவல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான சண்டை காட்சிகள் மற்றும் மிரட்டும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ராஜ்கிரண். இவர் சவாலான கேரக்டர்களை ஏற்று நடிப்பதில் கைதேர்ந்தவராக காணப்படுகிறார்.

அதிலும் நல்லி எலும்பை கையில் எடுக்கும் போதே பலரின் நினைவுக்கு முதலில் வருபவர் என்றால் நடிகர் ராஜ்கிரன் தான். இவர் அதுக்கென்றே பேர் போனவர் என்றும் சொல்லலாம்.

ராஜ்கிரன் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் காணப்படுகிறார். இவருக்கு சிறு வயது முதலே படிப்பின் மீது தான்  அதிக ஆர்வமாம். நன்றாக படித்து ஐபிஎஸ் தேர்வை எழுதி  காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்பது தான் நீண்ட நாள் கனவாக இருந்தது.


ஆனாலும் வீட்டு சூழ்நிலையால் 16 வயதினிலே வேலை தேடி சென்னைக்கு வந்தவர், வேலை தேடி அலைந்து இறுதியில் சினிமா  விநியோக கம்பெனி ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இடைத்தொடர்ந்து தினக் கூலியாக வேலைக்கு சேர்ந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையின் மூலம் சினிமா விநியோகஸ்தராக அவதாரம் எடுத்துள்ளார்.

அத்துடன், தினக் கூலியாக சென்னைக்கு வந்த ராஜ்கிரன் முதல் நாள் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா எனவும், இதைத்தொடர்ந்து மாத சம்பளமாக 150 ரூபாய் பெற்றுள்ளார்.

ஆனாலும் தனது தீவிர உழைப்பால் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய்க்கு சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ என்ற பெருமையை இவர்தான் பெற்றுள்ளாராம் என தற்போது  தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement