• Dec 27 2024

கர்ப்பமாக இருக்கும்போது இந்த ஆட்டம் தேவையா? ‘ராஜா ராணி’ நடிகைக்கு குவியும் கண்டனங்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

’ராஜா ராணி’ சீரியல் உள்பட சில சீரியல்கள் நடித்த நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்பமான நேரத்தில் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடி உள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ சீரியல் பிரபலமான நிலையில் அதன் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பானது என்பதும் இந்த சீரியலில் நிஹாரிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பதும் தெரிந்தது. அதன் பிறகு இவர் ’வம்சம்’ ’வேலைக்காரி’ ’வித்யா நம்பர் ஒன்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்குனர் ரஜித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக நிஹாரிகா அறிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.  தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’கஜினி’ படத்தில் இடம்பெற்ற பாட்டுக்கு செம நடனம் ஆடியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் கர்ப்பமான நேரத்தில் இப்படி ஆட்டம் தேவையா என்று சிலர் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அவருடைய ஆட்டத்திற்கு பலர் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிற்றுக்குள் இருக்கும் பாப்பா பத்திரம் என்றும், ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்றும், பாதுகாப்பு மிகவும் முக்கியம் சகோதரி என்றும் பல்வேறு விதமான கமெண்ட்ஸ் இந்த வீடியோவுக்கு பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement