• Dec 26 2024

’வேட்டையன்’ படப்பிடிப்பில் முதல் நாள்.. செம லுக்கில் இருக்கும் பிரபல நடிகர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்வேட்டையன்படத்தின் படப்பிடிப்பில் முதல் நாள் கலந்து கொண்டேன் என பிரபல நடிகர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் உள்ள லுக்கை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும்வேட்டையன்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதில் ரஜினிகாந்த் உட்பட பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும்பாகுபலிநடிகர் ராணா டகுபதி இன்று முதல்வேட்டையன்படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தலைவர் ரஜினியின் 170வது படமானவேட்டையன்படத்தில் கலந்து கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த படத்தின் கெட்டப்பையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த கெட்டப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற அமிதாப்பச்சன், பகத் பாசில், ஆகியவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது ரானா டகுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முடிவடைந்து விடும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக செய்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement