• Dec 26 2024

56 வயது நடிகருக்கு 25 வயசு பொண்ணு கேட்குதா? நெட்டிசன்கள் விளாசல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

56 வயது பிரபல நடிகருக்கு 25 வயது நடிகை ஜோடியாக நடித்தது மட்டும் இன்றி நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கும் வீடியோ வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கடுமையான கண்டனங்களை விளாசி வருகின்றனர்.

திரை உலகை பொருத்தவரை 60 வயது, 70 வயது நடிகர்களுக்கு, 25 வயது, 30 வயது நடிகைகள் ஜோடியாக நடிப்பது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், பாலகிருஷ்ணா உள்பட பல சீனியர் நடிகர்களுக்கு இளம் நடிகைகள் ஜோடியாக நடிப்பது பார்வையாளர்களுக்கு உறுத்தலாக உள்ளது.

இந்த நிலையில் 56 வயது பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிக்கும் ’மிஸ்டர் பச்சான்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக 25 வயது பாக்கியஸ்ரீ போஸ் என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் பல சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.



ரவி தேஜா மற்றும் பாக்யஸ்ரீ ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்த காட்சிகள், கிளாமர் காட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளதை அடுத்து 56 வயதில், மகள் வயது உள்ள நடிகையுடன் இந்த அளவுக்கு நெருக்கமான ரொமான்ஸ் தேவையா என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.  ஆனாலும் மாஸ் நடிகர்கள் பலர் இப்படித்தான் இளம் வயது நடிகைகளை ஜோடியாக நடிக்க வைத்து வருகின்றனர் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

மொத்தத்தில் 55 வயதை தொட்டவர்கள் மற்றும் அதையும் தாண்டிய நடிகர்கள் தங்கள் வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றும், ஜோடியாக நடிப்பவர்களையும் தங்கள் வயது ஏற்ற வகையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் இந்த அறிவுரைகளை எல்லாம் மாஸ் நடிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

Advertisement

Advertisement