• Dec 26 2024

ரியல் ஹீரோவான SOFA BOY... குட்டிஸ் உடன் தெறிக்கவிட்ட ஆல்பம் சோங் ரிலீஸ்..!!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சென்னையில் சில வாரங்களுக்கு முன் புயல் ,மழை என அனைவரும் தவித்து கொண்டிருந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வந்தது அதாவது மழையில் நனைந்து உங்கள் வீட்டு சோபா எல்லாம் நனைந்து இருக்கும் குறைந்த விலையில் எங்க கிட்ட வாங்கலாம் வாங்க என்று முகமது ரசூல் என்ற பையன் வீடியோ வெளியிட்டு இருந்தான். 

அந்த வீடியோ வைரலாகவே அந்த பையன்னும் ஒரே நைட்டில் ஒபாமா ஆனது போல இணையத்தில் வைரலாகிவிட்டான். அதன் பிறகும் பல வீடியோக்கள் வெளியிட்ட அந்த பையனுக்கு தற்போது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து இணையம் முழுக்க பேமஸ் ஆன குட்டி ஸ்டார் சோபா பாய்,  சினிமா வாய்ப்புகளை தொடர்ந்து இதன் அடுத்த கட்டமாக இசை அனுபவங்களையும் வெளியிட தயாராகினார்.


அதன்படி, Bereadymusic நிறுவன தயாரிப்பில், சோபா பாய் நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்று தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது முதன்முறையாக குழந்தைகள் கொண்டாடும் விதத்தில் சோபா பாய் உடன் இணைந்து குட்டிஸ் ஆடிய 'ஸ்கூல் லீவ் விட்டாச்சு' என்று ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. தற்போது வெளியான இந்த ஆல்பம் சாங் ரசிகர்களின் வரவேற்பினால் சார்ட்பஸ்டரில் இடம் பிடித்து வைரல் ஆகி வருகிறது.


Bereadymusic தயாரித்துள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் சுதர்ஷன் எழுதி இசையமைத்துள்ளார். அத்துடன் பல வெற்றிப் பாடல்களை உருவாக்கிய டோங்லி ஜம்போ இதனை வடிவமைத்து இயக்கி உள்ளார். மேலும் நடன இயக்குனர் ரிச்சி ரிச்சர்ட்ஸன் இப்பாடலுக்கு நடன பயிற்சிகளை வழங்கியுள்ளார். 

இவ்வாறு, தமிழில் முதன்முறையாக குழந்தைகள் நடிப்பில் குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக ஆல்பம் சாங் உருவாக்கப்பட்டது சிறப்பு என்பதுடன், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement