• Dec 27 2024

ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் லேட்டஸ்ட் ரொமான்டிக் கிளிக்ஸ்- செம மாடர்ன் லுக்கில் அசத்திறாங்களே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

1998 ஆம் ஆண்டு நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான 'அவள் வருவாளா' என்ற படத்தில் 'ருக்கு ருக்கு ருக்கு மணி' என்ற பாடலுக்கு குரூப் டான்சரில் ஒருவராக நடனம் ஆடி தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

அப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடந்து எல்.கே.ஜி., குர்கா, சந்தானத்தின் ஏ1, ஜாக்ப்பாட், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார்.


இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் தான் ரெடின் கிங்ஸ்லியை மிகவும் பிரபலமாகியது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது காமெடி சென்ஸ் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ஆடியன்ஸின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.


டாக்டர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர், சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் தற்பொழுது எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement